பிக்பாஸ் வீட்டில் வனிதா செய்யும் அடாவடி! கவின், சாக்க்ஷி மோதல்!

 

பிக்பாஸ் வீட்டில் வனிதா செய்யும் அடாவடி! கவின், சாக்க்ஷி மோதல்!

கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் நடிகை வனிதாவின் வரவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டி விட்டு அவர்களுக்கு இடையே  சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் நடிகை வனிதா.

கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் நடிகை வனிதாவின் வரவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டி விட்டு அவர்களுக்கு இடையே  சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் நடிகை வனிதா. இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா ஒரு முடிவோடு வந்திருப்பது இதன் மூலம் தெரிகிறது. 

vanitha

மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை குறிப்பிட்டு தனியாக டார்கெட் செய்து வருகிறார் வனிதா. அதே போல தற்போது சாக்க்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகச் சென்றுள்ளனர், சாக்க்ஷி உள்ளே நுழைந்ததால் கவின் கொஞ்சம் சாக்க்ஷியிடம் தள்ளி இருந்து வருகிறார். ஆனால், கவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார் சாக்க்ஷி.

kavin and sakshi

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட கவின் ஒரு டாஸ்க்கின் போது சாக்க்ஷியிடம் ஏதோ பேசுவதற்கு முற்பட, கவினின் செய்கையால் கடுப்பான சாக்க்ஷி ‘நீ எனக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. அதற்கு உனக்கு தகுதியும் இல்லை’ என்று கூறியிருந்தார். மேலும், நேற்றய நிகழ்ச்சியில் வனிதா மற்றும் ஷெரினுக்கு முட்டிக்கொண்டது.