பிக்பாஸ் ரேட்டிங்கை ஏற்ற அடுத்த அட்டாக்! பிக்பாஸில் தஞ்சமடைந்துள்ள வனிதாவை சுற்றி வளைத்த காவல்துறை!!

 

பிக்பாஸ் ரேட்டிங்கை ஏற்ற அடுத்த அட்டாக்! பிக்பாஸில் தஞ்சமடைந்துள்ள வனிதாவை சுற்றி வளைத்த காவல்துறை!!

நடிகர் விஜயகுமாரின்  மகள் நடிகை வனிதா விஜயகுமாரை கைது செய்ய சென்னை போலீஸிடம் தெலங்கானா போலீஸ் உதவிக்கோரியுள்ளது. 

நடிகர் விஜயகுமாரின்  மகள் நடிகை வனிதா விஜயகுமாரை கைது செய்ய சென்னை போலீஸிடம் தெலங்கானா போலீஸ் உதவிக்கோரியுள்ளது. 

நடிகை வனிதா விஜயகுமாருக்கும் ஆனந்தராஜுக்கும் கடந்த 2007ல் திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில் 2012ல் இருவருக்கும் விவாகரத்தாகியுள்ளது. இருவரது விவாகரத்துக்கு பின் மகள் ஜோவிதா தந்தை ஆனந்தராஜுடன் தெலுங்கானாவில் வசித்து வந்துள்ளார்.

ஜோவிதாவை கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வனிதா விஜயகுமார் சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டார். தனது மகளை வனிதா கடத்தி சென்று விட்டதாக தெலுங்கானா போலீஸிடம் ஆனந்தராஜ்  புகார் அளித்ததையடுத்து வனிதா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தெலுங்கானா காவல்துறை வனிதாவை தேடி வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருப்பதால் வனிதாவை கைது செய்யவும் ஜோவிதவை மீட்கவும் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் உதவிக்கோரியுள்ளது தெலுங்கானா போலீஸ்

பிக்பாஸ் வீட்டில் சண்டையிட்டு கொண்டிருக்கும் வனிதா கைது செய்யப்படுவாரா… இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து சிறைக்கு செல்வாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.