பிக்பாஸ் மதுமிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சேரன்… ! புகைப்படங்கள் வைரல் ! 

பிக்பாஸ் மதுமிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சேரன்… ! புகைப்படங்கள் வைரல் ! 

விஜய் டிவியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த போட்டியாளர்களின் ஒருவரான மதுமிதா சக போட்டியாளரான இயக்குநர் சேரனுக்கு வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்துள்ளார்.
விஜய் டிவி பிக் பாஸ் 3வது சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதில் முக்கியமான விஷயம் மதுமிதாவின் வெளியேற்றம் தான்.

madhumitha

காவேரி குறித்து மதுமிதா பேசியதால் அவரை ஷெரின் கடுமையாக பேசியதால் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக சமூகவலைதளங்களில் வைரலான்து. இதையடுத்து சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வீட்டில் இருந்த 8 பேர் மீதும் மதுமிதா வழக்கு தொடர போவதாக ஒரு செய்தி வெளியானது. இறுதிப் போட்டிக்கு மதுமிதாவின் குடும்பத்தினர் வராத நிலையில் மதுமிதா கணவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்தது போல் விஜய் டிவி போலியான வீடியோ வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் விஜய் டிவியை கேள்வி கேட்டு மதுமிதா கணவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. மதுமிதா விஷயத்தில் ரசிகர்கள் பலரும் விஜய் டீவிக்கு எதிராகத்தான் இருந்து வருகிறார்கள். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷெரின் மற்றும் சாக்க்ஷியை தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்தளித்தார் சேரன். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தார் சேரன். 
இந்த பதிவை கண்ட ரசிகர், மதுவுடன் தாங்கள் இந்த தருணங்களை பகிர்ந்திருந்தால் வெகு சிறப்பாக இருந்திருக்கும்! என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சேரன், வணக்கம், நான் மதுமிதாவிடம் பேசி கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் அவரை சந்திப்பேன் என்று பதில் அளித்திருந்தார். அவர் சொன்னது போலவே சமீபத்தில் மதுமிதாவை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார் சேரன்.

மேலும், சேரனுக்கு, மதுமிதா விருந்தும் வைத்து அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.