பிக்பாஸ் பிடிக்கலனா வேறு சேனல பாருங்கப்பா…. புதுச்சேரி சபாநாயகர்!

 

பிக்பாஸ் பிடிக்கலனா வேறு சேனல பாருங்கப்பா…. புதுச்சேரி சபாநாயகர்!

பிக்பாஸ் பிடிக்கவில்லை என்றால் ரிமோட் மூலம் வேறு தொலைக்காட்சியை மாற்றி பார்க்க வேண்டியதுதானே என்று புதுச்சேரி சபாநாயகர் பேரவையில் கூறியதால் சிரிப்பலை எழுந்தது. 

பிக்பாஸ் பிடிக்கவில்லை என்றால் ரிமோட் மூலம் வேறு தொலைக்காட்சியை மாற்றி பார்க்க வேண்டியதுதானே என்று புதுச்சேரி சபாநாயகர் பேரவையில் கூறியதால் சிரிப்பலை எழுந்தது. 

புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்பழகன், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாய சீர்கேடு ஏற்படுவதாகவும், அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி  அந்த நிகழ்ச்சியை தடை செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை என கைவிரித்தார்.

bigg boss tamil

 அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், அந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்றால் ரிமோட் மூலம் வேறு தொலைக்காட்சியை மாற்றி பார்க்க வேண்டியதுதானே என்று கூற அவையில் சிரிப்பலை எழுந்தது.