பிக்பாஸ் டைட்டில் வின்னர் கவின் கிடையாது! பிரபல இயக்குநர் அதிரடி!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் கவின் கிடையாது! பிரபல இயக்குநர் அதிரடி!

க்ளைமேக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3. இறுதி கட்டத்தை எட்டும் நேரத்தில் பிக்பாஸ் 3 டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுவரையில்  இறுதி சுற்றில் வெற்றியாளராக கவின் தான் இருப்பார் என்ற வியப்பில் ஆழ்த்தும் தகவல் வெளியான நிலையில் தற்போது அதிரடியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

kavin

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 19 நாட்களே மீதமுள்ள நிலையில், வின்னர் என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் பாதிப்பேர் மீது போலீஸ் புகார்களும், வழக்குகளும் உள்ளன. இந்த பிக்பாஸ் சீசனில் கொஞ்சம் அதிகமாகவே காதலும், சண்டைகளும்,சர்ச்சைகளுமாக நடந்து கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கவினுக்கு தான் ஆதரவு அதிமாக இருந்து வருகிறது. கவின் தான் இந்த சீசன் வின்னர் என்றும் பலரும் கூறி வரும் நிலையில், கவின் இந்த சீசன் வின்னர் இல்லை என்று சரவணன் மீனாட்சி இயக்குனர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

kavin

சரவணன் மீனாட்சி சீரியல் தொடரில் கதாநாயகனாக நடித்து வந்தவர் தான் கவின். அதன் மூலம் தான் அவருக்கு சினிமா துறையில் இடம் கிடைத்து. திடீரென்று தனக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் சீரியலை நிறுத்த முடிவெடுத்தார். இதனால் இயக்குனர்களும், சீரியலின் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களும் அவருடன் கெஞ்சியும், கோபப்பட்டும் கேட்டுக் கொண்டனர் . ஆனால் நான் உங்களைப் பார்த்தால் என் வாழ்க்கையில் நான் முன்னேற முடியாது, கடைசி வரை இப்படித்தான் இருக்கணும் என்று அலட்சியமாக கொஞ்சம்கூட பொறுப்புணர்வு இல்லாமல் பதில் கூறிவிட்டு சென்றார். இதனால்தான் இந்த சீரியலை நாங்கள் சீக்கிரமாக முடித்தோம் என்று மனக்குமுறல் உடன் இயக்குனர் பிரவீன் கூறினார். சமீபத்தில் மற்றும் ஒரு பேட்டியில் பங்கேற்ற இயக்குனர் பிரவீனிடம் இந்த சீசன் வின்னர் யாராக இருப்பார் என்று கேள்வி கேட்கபட்டிருந்தது. அதற்கு சற்றும் யோசிக்காமல் சாண்டியின் பெயரை சொன்னார் பிரவீன். அப்போது கவின் வெற்றி பெற வேண்டாமா என்று கேட்கப்பட்டதற்கு கவினும் வெற்றி பெற தகுதியுடையவர் தான் ஆனால், சாண்டி வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும், அவர் தான் இந்த சீசன் வின்னர் என்றும் கூறியுள்ளார் பிரவீன்.