பிக்பாஸ் ஒவியாவை தூக்கி சாப்பிடனுமா…’ தல-தளபதி’ தோசைக் கடைக்கு வாங்க…

 

பிக்பாஸ் ஒவியாவை தூக்கி சாப்பிடனுமா…’ தல-தளபதி’ தோசைக் கடைக்கு வாங்க…

கோவை நகரில் புகழ்பெற்ற லட்சுமி மில் அருகில் இருக்கிற மூன்று வண்டிக் கடைகளைத் தெரியாதவர்கள் கோவையில் யாருமே என்பதே மறுக்க முடியாத உண்மை.காரணம்… ஒரு கடையின் பெயர்’ சிப்பிக்குள் முத்து’,இன்னொரு கடையின் பெயர் ‘தல தளபதி’ தோசைக்கடை.

கோவை நகரில் புகழ்பெற்ற லட்சுமி மில் அருகில் இருக்கிற மூன்று வண்டிக் கடைகளைத் தெரியாதவர்கள் கோவையில் யாருமே என்பதே மறுக்க முடியாத உண்மை.காரணம்… ஒரு கடையின் பெயர்’ சிப்பிக்குள் முத்து’,இன்னொரு கடையின் பெயர் ‘தல தளபதி’ தோசைக்கடை.கடைகளின் பெயர் மட்டுமல்ல இங்கே தருகிற தோசைகளின் பெயர்களும் வித்தியாசமானவை.

thala thalapathy dosai

பாகுபலி 1 ,பாகுபலி 2,ஓவியா,கபாலி,ஜல்லிக்கட்டு என்று அவ்வப்போது தமிழகத்தில் ட்ரெண்ட் ஆகும் பெயர்கள் எல்லாம் இங்கே தோசைகளாகி விடுகின்றன! பெயரில் மட்டுமல்ல,செய்முறைகளும் வித்தியாசமானவை.

ஒரு கரண்டி தோசை மாவில் கொஞ்சம் மட்டன் கிரேவியும் முட்டையும் சேர்த்து கலக்கி தோசையாக வார்த்து அதன் மீது ஒரு கரண்டி குடல் வறுவலை அள்ளிப் போட்டு மசால் தோசை போல காரசாரமாகத் தரப்படும் தோசைக்குப் பெயர் ஜல்லிக்கட்டு! ஒரு தோசையின் நடுவில் திக்கான சிக்கன் தொக்கைத் தடவி,அதன் நடுவில் ஒரு சிக்கன்.லெக்பீஸ் வைத்து தரப்படுவது பாகுபலி ஒன்.

ஒரு முட்டையில் கொஞ்சம் வெங்காயம் பச்சை மிளகாய் துண்டுகளை சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றி அதன் மீது ஒரு புரோட்டா வைக்கபடுகிறது.அதன்மீது கொஞ்சம் மட்டன் தொக்கு தடவி,மீண்டும் ஒரு முட்டை, பச்சைமிளகாய் கலவையை அந்த புரோட்டாவின் மேல் ஊற்றி திருப்பிப் போட்டு எடுதால் அது பாகுபலி டூ!

thala thalapathy dosai

பிக்பாஸ்,கொஞ்சம் மிரட்டலான கலவை தோசை.ஓவியா கொஞ்சம் மெல்லிசான ஆனால் காரசாரமாக இருக்கிறது.கபாலி மட்டன் தொக்கும் , முட்டையும் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா ரகம். இது மட்டுமல்ல,முழு சைவர்களுக்கு பூண்டு தோசை,பனீர் தோசை,அரைகுறை சைவர்களுக்கு காளான் தோசை,எக்குடேரியன்களுக்கு மூன்று வகை முட்டை தோசை என்று,80 வகையான தோசைகள் தருகிறார்கள். 

பக்கத்தில் இருக்கும் ஏர் டெல் அலுவலக ஊழியர்கள் முதல் அக்கம் பக்கத்து ஆலைத் தொழிலாளர்கள் வரை கூட்டமோ கூட்டம்.இந்த தோசைக் கூட்டத்திடையே பட்டர் சப்பாத்தி,சாதாரண சப்பாத்தி,இட்லி இவற்றுக்கு நான்கு  வகை சட்டினிகள்,கூட்டத்தில் காணாமல் போய்விட்ட சாம்பாரும் உண்டு.

thala thalapathy dosai

எப்பவும் இதே வெரைட்டிதானா என்றால்,இல்லை. அவ்வப்போது புதுப்புது ஐட்டங்களை அறிமுகம் செய்துகொண்டே இருப்போம் என்கிறார்கள். ஒரு வேளை அதுவே இவர்களது வெற்றி ரகசியமாக இருக்கலாம்.இதை படித்துவிட்டு நீங்கள் போகும்போது சௌகிதார்  தோசையும்,மைய்யம் தோசையும் அறிமுகமாகி இருந்தாலும் இருக்கும்.குட்  லக்!