பிக்பாஸில் நிஜமான வில்லன் சாண்டி தான்! கொந்தளித்த பிரபல நடிகை 

பிக்பாஸில் நிஜமான வில்லன் சாண்டி தான்! கொந்தளித்த பிரபல நடிகை 

நாளுக்கு நாள் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா, சாக்க்ஷி என இவர்களுக்கிடையேயான முக்கோண காதல் ஒருபுறம் கண்றாவி என்றால், மீரா மிதுனின் அட்ராசிட்டி இன்னொரு புறம் அக்கப்போர் என்று பிரச்சனைகளுக்கு எப்போதும் பஞ்சமே இல்லாமல் டிஆர்பி யை ஏற்றி வந்தது விஜய் டிவி.

கடந்த வாரம் சேரனுக்கும், சரவணனுக்குமான மோதலையே மையமாக வைத்து தனது டிஆர்பியை எகிற வைத்த விஜய் டிவி, பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை கஸ்தூரி செல்வதாக இருக்கிறார் என்று கிளம்பிய செய்திக்கும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக பிரத்யேகமாக பேசினார். அப்போது, ”தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதாக கிளம்பிய செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்த நடிகை கஸ்தூரி, சாண்டி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை. அதனால்  சாண்டிய எப்போதும் பாஸிட்டிவ்வாக மட்டுமே பிக்பாஸ்ல காட்டுறாங்க. கமல் சார் கூட சாண்டிக்கு தான் முக்கியத்துவம் தராரு. லாஸ்லியா கூட ஒரு தடவை சொன்னாங்க.

சாண்டி எல்லோத்தையும் சிரிச்சுட்டே சொல்றாரு. சிரிக்காம சொன்னா அவர் தான் உண்மையான வில்லன் என்று. ஒவ்வொரு வாரமும் ஸ்கெட்ச் போட்றாரு. யார நாமினேட் பண்ணனும்னு சொல்லிக் கொடுக்கிறாரு” என்று சாண்டிக்கு எதிராக பொங்கியெழுந்தார். 
இந்த பிக்பாஸ் இன்னும் என்னவெல்லாம் பண்ணுமோ?