பிகில் 100வது நாள்… ‘குருவி 150 நாட்கள்; பிகில் 100 நாட்கள்’ தெறிக்கவிடும் ட்ரோல்ஸ்!

 

பிகில் 100வது நாள்… ‘குருவி 150 நாட்கள்; பிகில்  100 நாட்கள்’  தெறிக்கவிடும் ட்ரோல்ஸ்!

 நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு  வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில்  நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பிகில் படம் 100வது நாளை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான இப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது.

ttn

இதனால் விஜய்  ரசிகர்கள் பிகில் படத்தின் 100 நாட்கள் கொண்டாட்டத்தை டிவிட்டரில் ஆரம்பித்துள்ளனர். 

ttn

 

அதே சமயம் விஜய்யின்  ஹேட்டர்ஸ் பிகில்  படத்தின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான மதுரவாயல் திரையரங்கில் படத்தை 100 நாட்கள் ஓட்டிவிட்டு 100 நாட்கள் கொண்டாடுகிறீர்களா ? என்றும்  குருவி திரைப்படம்  150 நாட்கள் ஓடியது போல பிகில் படமும் 100 நாட்கள் ஓடியுள்ளது என்றும்  ட்ரோல் செய்து வருகிறார்கள்.