பிகில் வெறியாட்டம்: கலவர பூமியான கிருஷ்ணகிரி; பிகில் புள்ளீங்கோ 37 பேர் கைது!

 

பிகில் வெறியாட்டம்: கலவர பூமியான கிருஷ்ணகிரி; பிகில் புள்ளீங்கோ 37 பேர் கைது!

சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும்  பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள்

கிருஷ்ணகிரியின்  ரசிகர்களின் அட்டகாசத்தால் ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல்கள் கண்காணிப்பு கேமராக்கள் போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளியை முன்னிட்டு போலீசார் அமைத்திருந்த கட்டைகளால் ஆனா உயர மேடை ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்தது .

bigil

ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது .பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன .தீ வைத்து எரிக்கப்பட்டன. சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும்  பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள் .

bigil

இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் அங்கு வந்து விஜய் ரசிகர்களை லேசான தடியடி நடத்திக் கலைத்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 37 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்