பிகில் விமர்சனம்… இப்படி சொதப்பிட்டீயே அட்லி!

 

பிகில் விமர்சனம்… இப்படி சொதப்பிட்டீயே அட்லி!

புட்பால் விளையாட்டை மையப்படுத்துகிற கதை என்பதால் அடுத்த காட்சிகளை எளிதாக யூகிக்க முடிகிறது.

படம் முழுவதையும் ஒற்றை ஆளாய் தாங்கி நிற்கிறார் விஜய். இது முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்கு மட்டுமேயான படமாக தான் இருக்கிறது. அதிலும் படம் துவங்கியதில் இருந்தே ராயப்பன் கேரக்டர் எப்போது வரும் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்ததில் அட்லி ஜெயித்திருக்கிறார். அதிகாலை காட்சி என்பதால் விஜய் ஸ்கிரீனில் வரும்போதெல்லாம் தியேட்டரே தெறிக்கிறது. 

bigil

முதல் முறையாக விஜய் தாதா கேரெக்டரில் நடித்திருக்கிறார். நடை, உடை, பேச்சு என சகலமுமே மாஸாக இருக்கிறது. விஜய்யின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ராயப்பன், பிகில் என இரண்டு கேரெக்டர்கள் இருந்தாலும் அதிகமாக ஸ்கோர் செய்வது ராயப்பன் தான். இதனால் பிகில் கேரெக்டர் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

bigil

எம்ஜிஆர் மேனரிஸத்தில் விஜய் செய்யும் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து. விளையாட்டை மையப்படுத்தி எடுக்கும் கதையில் கிராபிக்ஸ் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இத்தனைக்கும் படத்தில் பிகில் புட்பால் பிளேயர். புட்பால் கிரவுண்டைக் காட்டும் போதெல்லாம் ஏதோ கார்ட்டூன் அனிமேஷன் படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது. 

bigil

பின்னணி இசையில் ரஹ்மானும் தடுமாறி இருக்கிறார். ரசிகர்களுக்கான அதிகாலை சிறப்பு காட்சி. முதல் ஷோ… பாடல்களுக்கு ரசிகர்கள் எழுந்து செல்கிறார்கள். விஜய் -நயன்தாரா காதல் கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட வொர்க் அவுட் ஆகலை. படத்திலும் நயன் தாரா டம்மியாக தான் வருகிறார். விஜய்க்கு பிறகு படத்தைத் தூக்கி நிறுத்துவது ரஹ்மான் தான். யோகிபாபுவும் படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். 
புட்பால் விளையாட்டை மையப்படுத்துகிற கதை என்பதால் அடுத்த காட்சிகளை எளிதாக யூகிக்க முடிகிறது. அத்தனை பலவீனமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அட்லி. வழக்கம் போல நிறைய படங்களில் இருந்து காட்சிகளை உருவி, சொருகி… இப்படி பண்ணீட்டீயே அட்லி!
படத்தில் நல்ல விஷயங்களே இல்லையா?

bigil

ஏன் இல்லை… படத்தோட ஆகப் பெரிய ப்ளஸ் என்று பார்த்தால் விஜய்.. விஜய்… விஜய் மட்டும் தான்! ஒரு நல்ல, தேர்ந்த நடிகராக விஜய் தெரிகிறார். அவரது உழைப்பையும், கால்ஷீட்டையும் வீணடித்திருக்கிறார் அட்லி. அட அட்லியோட பழைய படங்களில் இருந்த எமோஷன்ஸ் கூட இல்லாமல் வெறும் சக்கையாக இருக்கிறது பிகில். ஒரே வரியில சொல்லணும்னா விஜய்யை ஏமாற்றிவிட்டார் அட்லி!