பிகில் முதல் பேட்ட வரை… தினமும் மூன்று புதுப்படங்கள்… சன் டி.வி-யின் பொங்கல் கொண்டாட்டம்!

பிகில் முதல் பேட்ட வரை… தினமும் மூன்று புதுப்படங்கள்… சன் டி.வி-யின் பொங்கல் கொண்டாட்டம்!

பொங்கள் திருவிழாவையொட்டி ஐந்து நாள் திரைப்பட திருவிழாவை சன் டிவி அறிவித்துள்ளது. பிகில், பேட்ட போன்ற படங்கள் உள்பட தினமும் மூன்று திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளதாக சன் டி.வி கூறியிருப்பது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Bigil

பொங்கல் திருவிழாவையொட்டி என்ன என்ன புதுப்படங்கள் வரப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலிருந்த காலம் மாறி, தனியார் தொலைக்காட்சிகளில் என்ன என்ன புதுப்படங்கள் ஒளிபரப்பாகப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வகையில் பொங்கள் திருவிழா ஐந்து நாள் திரைப்படத் திருவிழாவை சன்டிவி அறிவித்துள்ளது.

petta-movie

பொங்கள் திருநாளன்று இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக மாலை 6.30 மணிக்கு விஜய் நடித்த பிகில் படம் ஒளிபரப்பாக உள்ளது. திரைப்படம் கடந்த தீபாவளிக்குத்தான் ரிலீஸ் ஆனது. 16ம் தேதி சிவ கார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படமும் 17ம் தேதி விஜய் சேதுபதியின் சங்கத் தமிழனும் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. 18ம் தேதி அஜித் ரசிகர்களை மகிழ்விக்க விஸ்வாசம் படமும் 19ம் தேதி சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ஒளிபரப்பாக உள்ளது. இது தவிர தினமும் கூடுதலாக இரண்டு படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்று அறிவித்துள்ளது சன் டி.வி நிறுவனம்.

பொங்கல் திருவிழாவை முடித்துக்கொண்டு புதுப்படம் பார்க்க தியேட்டர் செல்வது வழக்கமாக இருந்தது. இந்த ஆண்டு பொங்கல் அன்று மட்டுமின்றி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தியேட்டர் பக்கமே தலை வைக்க வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு சன் டி.வி-யின் அறிவிப்பு உள்ளது. இதனால், பொங்கள் திருவிழாவையொட்டி ரிலீஸ் ஆகும் படங்களின் தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.