பிகில் போஸ்டருக்கு கிளம்பிய எதிர்ப்பு: ஆட்டத்தை ஆரம்பித்த ஆளுங்கட்சி!?

 

பிகில் போஸ்டருக்கு கிளம்பிய எதிர்ப்பு:  ஆட்டத்தை ஆரம்பித்த  ஆளுங்கட்சி!?

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

பிகில் போஸ்டரில் கறி வெட்டும் கட்டை மீது விஜய் செருப்புக் கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

bigil

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த 19ஆம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்யின் பேச்சு வைரலானது. 

Coimbatore

இந்நிலையில் பிகில் போஸ்டரில் கறி வெட்டும் கட்டை மீது விஜய் செருப்புக் கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாகக் கோவையில் கறிக்கடை நடத்தும் சிலர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்  ஒன்றை அளித்துள்ளனர். அதில்,  நாங்கள் தெய்வமாக மதிக்கும் கறிவெட்டும் கட்டை மீது கால் வைத்துள்ளார் விஜய். இது எங்களுக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் அதில் கோபால் என்பவர், பிகில்  போஸ்டரை கிழித்ததுடன், அந்த காட்சியைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

bigil

ஆளும் அதிமுக அரசை விஜய் மீண்டும் விமர்சித்த பேசியதால் இதுபோன்ற புகார்கள் கொடுக்கப்படுவதாக விஜய் ரசிகர்கள் குற்றச்சாட்டி  வருகின்றனர்.