பிகில் படத்தை விமர்சியுங்கள் ஆனால்… விஜய்-க்கு முட்டுக்கொடுக்கும் நடிகர் ஆனந்த ராஜ்

 

பிகில்  படத்தை விமர்சியுங்கள் ஆனால்… விஜய்-க்கு முட்டுக்கொடுக்கும் நடிகர் ஆனந்த ராஜ்

பிடித்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் செய்கிறார்கள், பிடிக்காதவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் செய்கிறார்கள்.

பிகில் படத்தை விமர்சியுங்கள் ஆனால்  தனிநபரை  விமர்சனம் செய்யாதீர்கள்  என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.

bigil

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில்  நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

anand

இந்நிலையில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிகில்  ஆடியோ விழாவில் திகில் என்று பேசினேன். பிடித்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் செய்கிறார்கள், பிடிக்காதவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் செய்கிறார்கள். ஆனால்  படம் இன்றைய சூழல் மிகப்பெரிய வெற்றி படம். வசூல் சாதனை படைத்துள்ள படம். பிகில் படத்தை விமர்சியுங்கள, தனிநபரை  விமர்சனம் செய்யாதீர்கள்.  விஜய் என்ற மந்திர சொல்லுக்காவது ஒருமுறை படத்தை பார்க்கவேண்டும். விஜய்க்கு மட்டும் தான் அந்த சக்தி இருக்கு. பிகில்  வெற்றிக்கு விஜய்மட்டும் தான் காரணம். நடிப்பு தொழிலை விமர்சிக்க  யாருக்கும்  உரிமை இல்லை. ராயப்பன் கேரக்டருக்கு அவர் மிகவும் உழைத்தார். தனிநபர் விமர்சனம் செய்தால் நான் அதை வன்மையாகக் கண்டிப்பேன்’ என்று தெரிவித்தார்.