பிகில் படத்தில் விஜயுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துள்ளாரா?

 

பிகில் படத்தில் விஜயுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துள்ளாரா?

பிகில் படத்தில் விஜயுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிகில் படத்தில் விஜயுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துள்ளாரா?

சென்னை :பிகில் படத்தில் விஜயுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தெறி, மெர்சல்  போன்ற வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இதில் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் படத்தின் பரஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.  

அதைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ”சிங்கப்பெண்ணே” பாடலின் சிங்கள் டிராக் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள அந்த பாடல் படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. 

இந்த நிலையில் இதில் நடிகர் விஜயுடன், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் சிங்கப்பெண்ணே பாடலின் லிரிக் வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் இடம் பெற்றியிருந்தால், அவர் படத்தில் தோன்ற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.