பிகில் படத்திற்கு யு சான்றிதழ்? இணையத்தில் வைரலாகும் போலி சான்றிதழ்

 

பிகில் படத்திற்கு யு சான்றிதழ்? இணையத்தில் வைரலாகும் போலி சான்றிதழ்

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.வரும் தீபாவளி அன்று அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி பிகில் திரைப்படம் திரைக்குவரவுள்ளது. 

அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக போலியாக ஒரு சான்றிதழ் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.வரும் தீபாவளி அன்று அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி பிகில் திரைப்படம் திரைக்குவரவுள்ளது. 

certificate

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த போலி சான்றிதழ் குறித்து கருத்து தெரிவித்துள்ள படக்குழுவினர், இன்னும் படத்தின் எடிடிங் கூட முடியவில்லை என்றும், விரைவில் முடித்துவிடுவோம்.. அதற்கும் அவசரப்பட்டு பலர் போலியான தகவல்களை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த போலி சான்றிதழ் கவன் படத்தினுடையது என்றும் தெரியவந்துள்ளது.