பிகில் படத்திற்கு  யு/ஏ  சான்றிதழ்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

 

பிகில் படத்திற்கு  யு/ஏ  சான்றிதழ்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிகில் படத்தின் சென்சார் முடிந்து  யு/ஏ  சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

bigil

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

bigil

இந்நிலையில் இப்படத்துக்கு யு/ஏ  சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் ஆகும்.  

 

 

இதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில்  பிகில் படத்திற்கான சென்சார் முடிந்துவிட்டது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அன்புக்கு நன்றி. பிகில் ட்ரெய்லர் 2 மில்லியன் லைக்ஸ்களை கடந்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

bigil

முன்னதாக பிகில்  இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசியதால் கண்டிப்பாக சென்சாரில் ஆளுங்கட்சி பிரச்னை செய்வார்கள் என்று விஜய் ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் தற்போது சென்சார் முடிந்து  படம் ரிலீஸுக்கு  தயாராகியுள்ளது. இதனால் ரிலீஸ் தேதி எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர்.