பிகில் படத்திற்காக மனைவியுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த அட்லீ

 

பிகில் படத்திற்காக மனைவியுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த அட்லீ

இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். 

சென்னை: இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நின்ற கோலத்தில் இருக்கும் அத்தி வரத்தரை பல கோடி பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். 

அத்தி வரதரின் கடைசி நாள் தரிசனமான நாளை தரிசனம் ரத்து செய்யப்படுவதாகக் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.அதனால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றன. இந்த நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிகில் பட இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்றுள்ளார். 

அப்போது அவர்களுக்கு தனியாக மரியாதை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை கண்ட ரசிகர்கள் பிகில் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அட்லீ அத்திவரதரை தரிசனம் செய்ததாக கூறுகின்றனர்.