பிகில் படத்தின் போஸ்டரை கிழித்த கறி, மீன் வெட்டும் தொழிலாளர்கள்! 

 

பிகில் படத்தின் போஸ்டரை கிழித்த கறி, மீன் வெட்டும் தொழிலாளர்கள்! 

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் போஸ்டர் கறி கடை உரிமையாளர்களை அவமதிப்பதாகக் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் போஸ்டர் கறி கடை உரிமையாளர்களை அவமதிப்பதாகக் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அட்லி- விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும்.

பிகில்
விஜயின் பிகில் படத்தில் கறி மீன் வெட்டும் முட்டி கத்தி மீது நடிகர் விஜய் செருப்புகால் வைத்து நிற்கும் போஸ்டர் வெளியிட்டதற்கு கறிக்கடை நடத்தும் நபர்கள் சிலர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவககத்தில் மனு  அளித்தனர். கோவையைச் சேர்ந்த கோழிக்கடை கோபாலு  என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பிகில் பட போஸ்டரை கிழித்தது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பிகில் படத்தில்வரும் அந்த காட்சியை படத்தில் நீக்கி வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.