பிகில் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! அர்ச்சனா கல்பாத்தியின் அதிரடி

 

பிகில் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! அர்ச்சனா கல்பாத்தியின் அதிரடி

பிகில் இசைவெளியீட்டு விழாவுக்கான புதிய போஸ்டரை படத்தின் தயாரிப்பாளாரான அர்ச்சனா கல்பாத்தில் வெளியிட்டுள்ளார். 

Bigil

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் 19 தேதி நடைபெறவிருக்கும் பிகில் இசை வெளியீட்டு விழாவை நடிகை ரம்யா சுப்ரமணியம் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.