பிகில் படத்தின் புதிய புரொமோ வீடியோ வெளியானது!

 

பிகில் படத்தின் புதிய புரொமோ வீடியோ வெளியானது!

இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

bigil

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 25ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் பிகில்  படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் உள்ள  நிலையில் இதை குறிப்பிடும் விதமாக  புதிய  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.