பிகில் படத்தால் அட்லீக்கு வந்த அடுத்த சோதனை: இந்த முறை புகார் கொடுத்தது தெலுங்கு இயக்குநருங்கோ….

 

பிகில் படத்தின் தன்னுடையது என்று இயக்குநர்  செல்வா என்பவர் நுகர்வோர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழிக்குத்தொடர்ந்துள்ளார். 

தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார், இயக்குநர் அட்லீ மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

atlee

விஜய் படங்கள் என்றாலே சர்ச்சை என்று அகராதியில் மாற்றும் அளவுக்கு ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போதும், பிரச்னைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதம்  25 ஆம் தேதி   நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவான வெளியான பிகில் படத்தின் தன்னுடையது என்று இயக்குநர்  செல்வா என்பவர் நுகர்வோர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

chinni

இந்த சர்ச்சை ஓய்வதற்குள்   தெலுங்கு இயக்குநர் நந்தி சின்னி குமார் என்பவர், இயக்குநர் அட்லீ மீது ஐதராபாத் கச்சிபவுலி போலீஸ் ஸ்டேஷனில் மோசடி புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரும்,  பயிற்சியாளருமான அகிலேஷ் பாலின் கதையை சினிமாவாக எடுக்க முடிவு செய்திருந்தேன்.  இதற்காக அவரை சந்தித்து கதைக்காக 12 லட்சம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் போட்டேன்.

chinni

அத்துடன் கடந்த ஆண்டு முன்பணமாக 5.5 லட்சத்தையும் கொடுத்தேன். ஆனால் சமீபத்தில் பிகில்  படத்தின் டிரைலரை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அது  அகிலேஷ் பாலின் கதையை போலவே உள்ளது.

bigil

இதனால் அட்லீயை தொடர்புகொண்டு பேச முயற்சி செய்தேன் பலனில்லை. என்னிடம் உள்ள ஒப்பந்தத்தையும் அவருக்கு அனுப்பி வைத்தேன் பதிலில்லை. அகிலேஷ் பாலையும்  தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் என் கதையை திருடி படமாக்கிய குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

bigil

இந்நிலையில் இயக்குநர் நந்தி சின்னி குமார் புகாரின் அடிப்படையில் கச்சிபவுலி போலீசார், இயக்குநர் அட்லீ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அகிலேஷ் பாலிடம் விசாரணை மேற்கொண்ட பின் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.