பிகில் டிரைலரின் புதிய சாதனை : உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்!

 

பிகில்  டிரைலரின் புதிய சாதனை : உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்!

பிகில்  படத்தின் டிரைலர்  வெளியாகி 10 மில்லியன்  பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

பிகில்  படத்தின் டிரைலர்  வெளியாகி 10 மில்லியன்  பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

vijay

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் டிரைலர்  நேற்று  மாலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில், கால்பந்து பயிற்சியாளராக இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்திலும்  விஜய் காட்சி அளிக்கின்றார். பெண்களை கவுரவிக்கும் வகையிலும், கால்பந்து விளையாட்டை முன்னிலைப்படுத்தியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், காதல், மாஸ் என பட்டையை கிளப்பியுள்ளது. 

bigil

இந்நிலையில் டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பேர் இதை  பார்த்துள்ளனர். 1 மில்லியன் லைக்குகளையும்  பிகில்  டிரைலர்  பெற்று வெறித்தனம் செய்துள்ளது.