பிகில் ஆனாலும், திகில் ஆனாலும் சிறப்பு காட்சி இல்லை ! அரசின் அறிவிப்பால் திகிலடைந்த ரசிகர்கள் !

 

பிகில் ஆனாலும், திகில் ஆனாலும் சிறப்பு காட்சி இல்லை ! அரசின் அறிவிப்பால் திகிலடைந்த ரசிகர்கள் !

பண்டிகைக் காலங்களில் எந்த படத்திற்கும் சிறப்புக் காட்சிகள் அனுமதிக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்ததை அடுத்து பிகில் படத்திற்கு டிக்கெட் எடுத்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் எந்த படத்திற்கும் சிறப்புக் காட்சிகள் அனுமதிக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்ததை அடுத்து பிகில் படத்திற்கு டிக்கெட் எடுத்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் பேட்டி அளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பண்டிகை நாட்களில் சிறப்புக் காட்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதி தவறாக பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையே சென்னையில் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பிகில், திகில் என எந்த திரைப்படமானாலும், யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் பொதுவானது என தெரிவித்தார்.

bigil

பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு என அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அரசின் எச்சரிக்கையையும் மீறி பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சியை திரையிடுவதாகக் கூறி டிக்கெட் விற்பனை செய்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரத்தில் கார்த்திகேயன், பாபு உள்ளிட்ட திரையரங்குகளில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி எனக்கூறி அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறப்பு காட்சி இல்லாத பட்சத்தில் 6 மணி அல்லது 7 மணிக்குத் தொடங்கும் முதல் காட்சிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என்று திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே பிகில் படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் மனு அளித்துள்ளார்.