‘பிகில் ஆடியோ விழாவில் விஜய் ஜனநாயக அடிப்படையில் பேசினார்’ அதிமுக அமைச்சர் கருத்து!

 

‘பிகில்  ஆடியோ விழாவில் விஜய் ஜனநாயக அடிப்படையில் பேசினார்’  அதிமுக அமைச்சர் கருத்து!

நடிகர் விஜய் ஆளும்கட்சியை விமர்சிப்பது போல  பேசி சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிகில்  இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்கு  அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

vijay

இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆளும்கட்சியை விமர்சிப்பது போல  பேசி சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் ஆளுங்கட்சி பிகில்  திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

jayakumar

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் விஜய் பட வெளியீட்டுக்கு அதிமுக தடை போடுகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் படத்தை வெளியிடலாம். விஜய் ஜனநாயக முறையில் பேசினார். நாங்கள் அதை ஜனநாயக முறையில் எதிர்கொண்டோம்’ என்றார்.