‘பிகிலை’த் தொடர்ந்து பிகில் மாதிரியே இன்னொரு படம்!  

‘பரியேறும் பெருமாள்’, ‘பிகில்’ என நடிகர் கதிரின் க்ராப் உயர்ந்து கொண்டே வருகிறது. அலட்டல் இல்லாத நடிப்பு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் உருவாகி வருகிறது. இந்நிலையில், கதிரும், யோகிபாபு சேர்ந்து மற்றுமொரு கால்பந்தாட்ட கதையம்சம் கொண்ட படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜடா என்ற பெயரில் டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

jada

வட சென்னை இளைஞர்களின் பெருங்கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக கொண்டு உருவான படம் இது. பலர் இந்திய அளவில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர்களாக இருந்தாலும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் இளைஞன், அதே விளையாட்டு சூதாட்டத்திற்குள் போய் என்னவாகிறான் என்பது தான் கதை என்கிறார் இயக்குநர்.