பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு போன் பண்ணுங்க; கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ளுங்க!

 

பிஎஸ்என்எல்  மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு போன் பண்ணுங்க;  கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ளுங்க!

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது  கொரோனா வைரஸால் இந்தியாவிலும் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 3070 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகளவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது  கொரோனா வைரஸால் இந்தியாவிலும் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

இது குறித்து பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் வீண் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

ttn

இந்நிலையில்  உள்துறை அமைச்சகம்,  பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு போன் செய்தால், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைச் சொல்லும்படியாக  அமைக்கப்பட்டுள்ளது. இருமல் சத்தத்துடன் ஆரம்பமாகும் அந்த  விழிப்புணர்வு ஆடியோவில், கொரோனா வைரஸை தடுக்க சோப் மூலம் கைகளை அடிக்கடி கழுவவேண்டும்.

ttn

கைகளை கண், மூக்கு, வாய் பகுதிகளில் வைக்க கூடாது. காய்ச்சல், இருமல் இருவர்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். குறிப்பாக இருமல்  வரும் போது கைக்குட்டை, டிஷ்ஷு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும்  இதுகுறித்த சந்தேகங்களுக்கு  01123978046 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.