பிஎம் நரேந்திர மோடி படப்பிடிப்பு ஆரம்பம்: சில தகவல்கள்?

 

பிஎம் நரேந்திர மோடி படப்பிடிப்பு ஆரம்பம்: சில தகவல்கள்?

பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப காலமாய் வாழ்க்கை வரலாற்று படங்கள் பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. கீதா போகட், தோனி, மண்டோ என நீளும் இவ்வரிசையில் நரேந்திர மோடி இணைந்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. மோடி கதாபாத்திரத்தில் விகேக் ஓபராய் நடிக்கிறார், பொமன் இரானி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர்.

மேரி கோம் படத்தை இயக்கிய ஒமங் குமார்தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இரண்டாம் கட்ட படிப்பிடிப்புகளை குஜராத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். லிஜண்ட் குலோபல் ஸ்டுடியோஸ் சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் சிங் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.