பிஎம்டபிள்யூ காரை ஓட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஒ ? – வைரல் வீடியோ

 

பிஎம்டபிள்யூ காரை ஓட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஒ ? – வைரல் வீடியோ

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஒ ஓட்டுவது போன்ற வீடியோவை பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ளது .

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஒ ஓட்டுவது போன்ற வீடியோவை பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ளது .

சொகுசு கார் நிறுவனத்தில் இரு மாபெரும் ஜாம்பவான்களில் ஒன்று பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ். போட்டிப்போட்டுக்கொண்டு புது தொழில்நுட்பத்தையும், புதிய மாடல்களையும் அறிமுக செய்வதில் பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களுக்கு நிகர் ஏதுமில்லை. இந்நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஒ தியேத்தர் ஜெத்ச்சே சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டது பிஎம்டபிள்யூ.

 

Retirement is when you can leave your past behind and embrace your future. ?#BMW #Mercedes #Zetschehttps://t.co/S0njE4CNfp pic.twitter.com/wK1sLm2gS8

— BMW (@BMW) May 22, 2019

 

அந்த வீடியோவில் தியேத்தர் போன்று இருக்கும் ஒருவர் நடித்துள்ளார். அந்த வீடியோவில் தனது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து ஓய்வு பெறும் ஜெத்ச்சே, தன் வீட்டிற்கு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரில் செல்கிறார். வீட்டிற்கு சென்ற பின் தனது பார்க்கிங் ஏரியாவில் இருந்த மெட்டாலிக் ஆரஞ்ச் பிஎம்டபிள்யூ ஐ8 ரோட்ச்தர் காரில் செல்வது போன்ற ஒரு வீடியோவை பிஎம்டபிள்யூ அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளவாசிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ஓய்வு பெற்ற பென்ஸ் சிஇஓ தியேத்தர் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு பணியாற்றவரவேண்டும் என சொல்லாமல் சொல்கிறது பிஎம்டபிள்யூ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.