பிஇ படிப்பில் சேருவதற்கு இனி வேதியியல் கட்டாயம் இல்லை! 

பிஇ படிப்பில் சேருவதற்கு இனி வேதியியல் கட்டாயம் இல்லை! 

பொறியியல் படிப்பில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம்  இல்லை என தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம்  இல்லை என தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

இதுவரை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2- வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருந்தால் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர முடியும் என்பது விதியாக இருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இனி வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

engineering courses

இயற்பியல், கணிதம் படித்திருந்தாலே போதும் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது இயற்பியல் , கணிதம், உயிரியியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் படிந்திருந்தாலே போதும். இந்த முறை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படும். இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.