பா.ம.க – ரஜினி கூட்டணியை உடைக்க முயற்சி? – அதிர்ச்சி… அதிருப்தியில் ராமதாஸ்

 

பா.ம.க – ரஜினி கூட்டணியை உடைக்க முயற்சி? – அதிர்ச்சி… அதிருப்தியில் ராமதாஸ்

ரஜினிகாந்த் வருகிற ஏப்ரல் மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களம் காணப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன், ரஜினியுடன் பா.ம.க இணைய உள்ளது என்றார்.

ரஜினியுடன் பா.ம.க கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக தமிழருவி மணியன் அறிவித்ததால் ரஜினி, ராமதாஸ் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனிடையே இவர்கள் கூட்டு சேர்வதை தடுக்கும் முயற்சியும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் வருகிற ஏப்ரல் மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களம் காணப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன், ரஜினியுடன் பா.ம.க இணைய உள்ளது என்றார். இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ராமதாசிடம் கேட்டபோது, மறுப்பு தெரிவிக்கவில்லை. கட்சி தொடங்கட்டும் பார்க்கலாம் என்றார். இதன் மூலம் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது உறுதியாகி உள்ளது என்று தமிழக அரசியலில் பேசப்படுகிறது. 

ramadoss

கட்சி தொடங்கும் திட்டம், கூட்டணி எல்லாம் ரகசியமாக நடந்துவரும் நிலையில் பொது வெளியில் அப்பட்டமாக அது பற்றிய தகவலை தெரிவித்ததாதல் தமிழருவி மணியன் மீது ரஜினி கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் நாசூக்காக தன்னுடைய கோபத்தை ரஜினி வெளிப்படுத்தியதாகவும், அதனால்தான் இனி ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை பேட்டி அளிக்க மாட்டேன் என்று தமிழருவி மணியன் கூறினார். ராமதாசும் தன்னுடைய அதிருப்தியை ரஜினி தரப்பிடம் தெரிவித்துள்ளாராம். இருப்பினும் அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதாக தொடர்ந்து பேசும்படி கட்சியினருக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளாராம்.
இதற்கிடையே ஆடிட்டர் குருமூர்த்தி அனுப்பியதாக கூறி அன்புமணியை சந்திக்க அரசியல் விமர்சகர்கள் இருவர் முயற்சி செய்துள்ளனர். இது குறித்து அன்புமணி நேரடியாக ஆடிட்டர் குருமூர்த்தியை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அப்போது அவர் நான் யாரையும் அனுப்பவில்லை என்று குருமூர்த்தி கூறியுள்ளார். இதனால் வந்தவர்கள் யார், யார் சொல்லி வந்தார்கள் என்று அன்புமணி தரப்பு விசாரணையில் இறங்கியுள்ளது. கூட்டணியை கலைக்க முயற்சி நடப்பதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.