பா.ஜ.க-வை கழற்ற நேரம் பார்க்கும் இ.பி.எஸ்! – நெருக்கி பிடிக்கும் பா.ஜ.க!

பா.ஜ.க-வை கழற்ற நேரம் பார்க்கும் இ.பி.எஸ்! – நெருக்கி பிடிக்கும் பா.ஜ.க!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்தும் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என்று பேசப்பட்டது. இதனால், சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை கழற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க தலைவர்கள் கூறி வருகின்றனர். 

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கழற்றிவிட சரியான நேரம் எப்போது அமையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்த்துவருவதாகவும் இது அறிந்து எடப்பாடிக்கு எதிரான மூவை பா.ஜ.க தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்தும் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என்று பேசப்பட்டது. இதனால், சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை கழற்றிவிட வேண்டும் என்று அ.தி.மு.க தலைவர்கள் கூறி வருகின்றனர். 

eps-with-modi-09

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் அத்துணை ரகசியங்களும் மத்திய அரசிடம் உள்ளது. இதை வைத்து பா.ஜ.க காரியம் சாதித்து வரும் நிலையில் பா.ஜ.க-வை கழற்றிவிட்டால் அ.தி.மு.க என்ன ஆகும் என்று தெரியாது என்று பா.ஜ.க-வினர் மிரட்டி வருகின்றனர்.
மேலும் அ.தி.மு.க-வையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்று பா.ஜ.க தலைமை நம்புகிறது. எப்படியும் 20-25 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம் என்று இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் நம்பிக்கை அளித்ததால் பலமான கூட்டணி அமைக்க பா.ஜ.க அனைத்து சக்தியையும் பயன்படுத்தியது. ஆனால், சொன்னதுபோல நடக்கவில்லை என்பதால் அ.தி.மு.க-வை நம்பி பலனில்லை என்ற நிலைக்கு பா.ஜ.க வந்துவிட்டது. அதனால்தான் ரஜினியை மிகவும் பலமாக நம்பிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ரஜினியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

rajini

இவை எல்லாம் எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் தனியாக நின்று ஜெயிக்க வேண்டும் என்று திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளார் என்று கூறுகின்றனர். பா.ஜ.க ரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறது. அவர் வந்துவிட்டால், தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியில் நீடிக்க முடியாது, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்து, தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து தேர்தலை நடத்த பா.ஜ.க தயாராகி வருகிறது என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் தமிழக அரசியல் உள்ளது.