பா.ஜ.க வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு சென்ற அ.தி.மு.க.வினர்: சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு!

 

பா.ஜ.க வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு சென்ற அ.தி.மு.க.வினர்: சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு!

பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுகவினர் மீது சோடா பாட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் : பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுகவினர் மீது சோடா பாட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தல் 

dmk

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அதிமுக மற்றும் திமுக கட்சிகள்  தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக போன்ற கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் உட்பட அதிமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அதகளப்படுத்துகின்றனர்.

சோடா பாட்டில் வீசி தாக்குதல்

soda

அந்த வகையில், ராமநாதபுரம் அருகே பெரிய பட்டினத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 
ஆதரவு கோரும் வகையில், அமைச்சர் மணிகண்டன் மற்றும் எம்பி அன்வர் ராஜா தலைமையில் வாக்கு சேகரிக்கச் சென்றிருந்தனர். ஆனால்  எதிர்பாராத வகையில், சிலர் அதிமுக கூட்டணியினர் மீது சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தினர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அதிமுக நிர்வாகி 

nainar

இந்த தாக்குதலில், திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் உடையத்தேவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசுக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பாஜக வேட்பாளருக்கு எதிராக அதிமுக அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தீய சக்திகளின் வேலை 

nainar

இதைத் தொடர்ந்து பிரச்சார கூட்டத்தில் சோடா பாட்டில் வீசியவர்கள் என்பது குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாஜக- அதிமுக கூட்டணியைக் கண்டு பொறாமையால் சில தீய சக்திகள் இது போன்ற விஷம தனங்களில் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினரும், பாஜகவினரும் குற்றச்சாட்டியுள்ளனர்.

 நயினார் நாகேந்திரனுக்கு எதிரான தாக்குதல்

vairamuthu

முன்னதாக வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையின் போது, இந்து மதத்தை இழிவாக பேசுபவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தவர் நயினார் நாகேந்திரன். தற்போது அவர் போட்டியிடும் ராமநாதபுரம் மாவட்டம் சிறுபான்மையினர் மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அதனால்  பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அங்கு போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடே இந்த தாக்குதல் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இதையும் வாசிக்க: பாலியல் தொல்லை தந்த ஸ்விக்கி ஊழியர்: கூப்பன் கொடுத்து சரிக்கட்ட பார்த்த ஸ்விக்கி நிறுவனம்; அதிர்ச்சி சம்பவம்!