பா.ஜ.க.வுக்கு ஆதரவு இல்லை: அ.தி.மு.க.வுக்கு ஆதரவு; எம்.எல்.ஏ தனியரசு வைக்கும் செக்!

 

பா.ஜ.க.வுக்கு ஆதரவு இல்லை: அ.தி.மு.க.வுக்கு ஆதரவு; எம்.எல்.ஏ தனியரசு வைக்கும் செக்!

மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில்  தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு பங்கேற்கிறார்.

சென்னை: மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில்  தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு பங்கேற்கிறார்.

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவந்த மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் தற்போது மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கலந்து கொள்ளவுள்ளார்.

அதிமுக தலைமையில் கூட்டணி இருப்பதால் தான் இதில் இருப்பதாகவும், அதற்கு மாறாக பாஜக தலைமையிலான கூட்டணி என்றால் அதனை நிராகரிப்பேன். பாஜக-வுடன் கூட்டணி வைத்ததைத் தவிர, அதிமுக-வுடன் மாற்றுக்கருத்து இல்லை. ஒன்பது ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை இருக்கிறது. அதனால் பாஜக போட்டியிடாத தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிப்போம்.

முன்னதாக தமிமுன் அன்சாரி, திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும்தான் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை தாங்கள் எடுத்துள்ளோம். இடைத்தேர்தல் ஆதரவு குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும்’ என்றார்.