பா.ஜ.க.வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு எதிராக கருப்பு கொடி….. அடையாளம் தெரியாத 30 பேர் மீது வழக்கு….

 

பா.ஜ.க.வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு எதிராக கருப்பு கொடி….. அடையாளம் தெரியாத 30 பேர் மீது வழக்கு….

கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய அடையாளம் தெரியாத 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

18 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த சில தினங்களுக்கு முன் அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். இதனையடுத்து அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவதற்கு பா.ஜ.க. சீட் வழங்கியது. டெல்லியிலிருந்து மத்திய பிரதேசத்துக்கு சிந்தியா வந்த போது பா.ஜ.க.வினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்தது அந்த கட்சிக்கு பலமாகவும், காங்கிரசுக்கு பலகீனமாகவும் பார்க்கப்படுகிறது.

சிந்தியாவுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு

இந்நிலையில் நேற்று ஜோதிராதித்ய சிந்தியா காரில் போபால் விமான நிலையத்துக்கு செல்லுகையில், கமலா பார்க் பகுதியில் சிந்தியாவின் வாகனங்கள் வந்து கொண்டிருந்தபோது சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று சிந்தியாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியது. மேலும் அந்த வாகனங்களை நிறுத்த முயன்றனர் ஆனால் அது அவர்களால் முடியவில்லை. தற்போது விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சிந்தியாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய அடையாளம் தெரியாத 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவராஜ் சிங் சவுகான்

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரபல தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், இந்த சம்பவம் சிந்தியாவை தாக்க நடந்த முயற்சி மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இந்த மாநிலத்தில் சட்ட மற்றும் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. அவரது காரை நிறுத்தி மற்றும் அதன் மீது கற்களை வீசி அவரை தாக்க முயன்ற முயற்சியாகும் என தெரிவித்தார்.