பா.ஜ.க-வின் சுயநலம் வீழ்த்தப்பட்டது! – சிவசேனா தாக்கு

பா.ஜ.க-வின் சுயநலம் வீழ்த்தப்பட்டது! – சிவசேனா தாக்கு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கு பல்வேறு கட்சிகளும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மராட்டியம் மற்றும் சிவசேனா சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வின் சுயநலம் வீழ்த்தப்பட்டதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா விமர்சனம் செய்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கு பல்வேறு கட்சிகளும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மராட்டியம் மற்றும் சிவசேனா சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

bjp

டெல்லி தேர்தலில் ஒரு அரசாங்கம் வெற்றியைப் பெற வேண்டும் என்று முழு அரசு எந்திரத்தையும் பயன்படுத்தியது. ஆனால் என்ன செய்வது துடைப்பத்தின் முன்னாள் அது தோல்வியடைந்துவிட்டது. அரசியல் எதிரிகள் எல்லோரும் தேசவிரோதிகள், தாங்கள் மட்டுமே தேசத்தை நேசிப்பவர்கள் என்ற மாயயைக் காட்டிய சிலர் இருந்தனர். ஆனால், டெல்லி மக்கள் அவர்களுக்கான இடத்தைக் காட்டிவிட்டனர். வெற்றிபெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கூட ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டார். உள்ளூர் பிரச்னைகளை விட்டுவிட்டு சர்வதேச பிரச்சினைகளைக் கொண்டு வந்த மக்களின் மனதை மாற்ற பா.ஜ.க முயன்றது. டெல்லியில் மன் கி பாத்துக்கு பதில் ஜன் கி பாத் (பிரதமரின் குரலுக்கு பதிலாக மக்களின் குரல்) வெற்றி பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

arvind

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில், “அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இது எதிர்பார்த்த வெற்றிதான். இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவின் சுயநலத்தை டெல்லி மக்கள் வீழ்த்தியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.