பா.ஜ.கன்னா கட்சியா? கழகமா? தேர்தல் பிரச்சாரத்தில் உளறிக்கொட்டிய காயத்ரி ரகுராம்

 

பா.ஜ.கன்னா கட்சியா? கழகமா?  தேர்தல் பிரச்சாரத்தில் உளறிக்கொட்டிய  காயத்ரி ரகுராம்

இரு வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் பா.ஜ.கவின் நட்சத்திர பேச்சாளராகக் களமிறங்கியுள்ளார்.

பாஜக ஆதரவாளரும் நடிகையுமான  காயத்ரி ரகுராம் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி திண்டாடி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க போட்டியிட இரண்டு ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  அந்த இரு வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் பா.ஜ.கவின் நட்சத்திர பேச்சாளராகக் களமிறங்கியுள்ளார்.

ttn

 மன்னாடிமங்கலத்தில் பிரச்சாரம் செய்த அவர் வேட்பாளர் பெயர், சின்னம் என அனைத்தையும் ஒருவர் பின்னால் இருந்து சொல்லி தர. அதை காதில் வாங்கிக்கொண்டு   மைக்கை பிடித்து சொல்லிக் கொண்டிருந்தார். இறுதியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பாரதிய ஜனதா கழகத்திற்கும் வாக்களித்து வெற்றி பெற வேண்டும் என்றார்.  பாரதிய ஜனதா கட்சி என்பதை மறந்து பிரச்சாரத்தில் உளறிக்கொட்டிய காயத்ரியால்  அங்கு சலசலப்பு ஏற்பட்டது.