பாஸ் பெற்றுக் கொண்டு வெளியே செல்ல வேண்டிய திட்டத்தில் மாற்றம்!

 

பாஸ் பெற்றுக் கொண்டு வெளியே செல்ல வேண்டிய திட்டத்தில் மாற்றம்!

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் பாஸ் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. அதே போல உள்ளூர் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் சொந்த வாகனங்களில் செல்வதற்கும் போலீசார் அனுமதிக்கவில்லை. 

ttn

இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் பாஸ் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அவசர தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டிய மக்கள், வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர்களிடம் பாஸ் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நடைமுறை தற்போது நீக்கப்படுவதாக உள்துறை  தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊரடங்கு அமலில் இருப்பினும் மக்கள் வெளியே செல்வது தொடர்வதால், அவசர பயணங்களுக்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர்களிடம் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறை நீக்கப்படுகிறது என்றும்  மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மூலம் பாஸ் பெற வேண்டும் என்ற பழைய நடவடிக்கையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.