‘பாஸ் இல்லாமலே காஞ்சிபுரம் கலெக்டர் குடும்பத்துக்கு விவிஐபி தரிசனம்’ : போலீசார் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

 

‘பாஸ் இல்லாமலே காஞ்சிபுரம் கலெக்டர் குடும்பத்துக்கு விவிஐபி தரிசனம்’ : போலீசார் வெளியிட்ட பரபரப்பு  வீடியோ!

காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தில் போலீசார் ஒருவரை பொது இடத்தில் வைத்து மாவட்ட  ஆட்சியர் பொன்னையா திட்டிய வீடியோ ஒன்று பரபரப்பை கிளப்பிய நிலையில்,  தற்போது  மீண்டும் ஒரு வீடியோவெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தில் போலீசார் ஒருவரை பொது இடத்தில் வைத்து மாவட்ட  ஆட்சியர் பொன்னையா திட்டிய வீடியோ ஒன்று பரபரப்பை கிளப்பிய நிலையில்,  தற்போது  மீண்டும் ஒரு வீடியோவெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தின் போது, விஐபி வரிசையில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவர் பொதுமக்களை அனுமதித்ததாகத் தெரிகிறது. இதனால் அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா, காவலரை ஒருமையில் திட்டினார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில்  பரவி பரபரப்பைக் கிளப்பியது. சீருடை அணிந்த அரசு அதிகாரி ஒருவரி இப்படி பொதுஇடத்தில் வைத்து திட்டுவது ஏற்புடையதல்ல என்று காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன் ஆட்சியர் பொன்னையா மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில்  இருக்கும் காவலர்கள் படும் துயரம் குறித்த வீடியோ ஒன்று காவலர்கள் சார்பில் வெளியிடப்பட்டது.

 

 

அதேபோல்  மாவட்ட ஆட்சியர் பொன்னையா குறித்த மற்றொரு வீடியோ ஒன்று பரவ தொடங்கியுள்ளது. அதில், காவல் ஆய்வாளரைத் திட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்தினரை, பாஸ் இல்லாமல், தனது அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி விவிஐபி நுழைவு வாயில் வழியாக அழைத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. 

 

இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றில், தான் லைசென்ஸ் போட்டு அனுப்பின ஆளை இன்ஸ்பெக்டர் கையபுடிச்சு தள்ளினார் என்று பொன்னையா ஆவேசமாகக் கத்துகிறார். அதனால் ஆட்சியர் பொன்னையாவின் கோபத்திற்கு இதுதான் காரணமாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.