பாவங்களை நீக்கும் இந்திரா ஏகாதசி விரதம்

 

பாவங்களை நீக்கும் இந்திரா ஏகாதசி விரதம்

இந்திரா ஏகாதசி விரதம் பூர்வ ஜென்ம பாவங்களை போக்கும் விரதமாக கடைபிடிக்கபடுகிறது. இந்த விரதத்தின் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்போம்

ஐப்பசி மாத தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி இந்திரா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாவங்களை நீக்கும் ஏகாதசியாகவும் , முன்னோர்களுக்கு பிடித்த பொருட்களை படையல் இட்டு வழிபாடு செய்யும் ஏகாதசியாகவும் இந்த ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது. 

perumaal

கணபதியை அதிகமாக ஆராதிப்பவர்கள் சதுர்த்தி விரதத்திற்கும், முருகனையே அதிகமாக போற்றுவோர் சஷ்டி விரதத்திற்கும், துர்க்கையை அதிகமாக வணங்குபவர்கள் அஷ்டமி விரதத்திற்கும், சிவனை அதிகம் பூசிப்பவர் பிரதோஷ விரதத்திற்கும், விஷ்ணுவை அதிகமாக விரும்புவோர் ஏகாதசி விரதத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

perumaal

ஒவ்வொருவருமே ஏராளமான வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்து வருகிறோம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைப்படுத்தும் துயரம் வேதனை எனப்படும். கண்ணுக்குத் தெரிந்தே நம்மைத் துயரங்களில் ஆழ்த்துபவை சோதனை எனப்படும்.வேதனைகளையும், சோதனைகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கும் ஏகாதசி ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசியாகும்.

perumaalkij

புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், தானங்கள் முதலியவற்றால் உண்டாகும் பலன்களையும் இந்த ஏகாதசியே கொடுக்கும் என்று நம் முன்னோர்கள் பல்வேறு நூல்களில் தெரிவித்துள்ளனர். விதிமுறை தெரியாமலோ அல்லது பெருமைக்காகவோ இந்த விரதம் இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் எல்லாம் தரக்கூடியது இந்த ஏகாதசியாகும்.இந்த ஏகாதசி முன்னோர்கள் ஆசியை பெற வழிபாடு செய்யும் ஏகாதசியாகும்.