பால் விலை ஏறினாலும் லாபம் மட்டும் குறையவில்லை……சக்கை போடு போடும் பிஸ்கட் நிறுவனம்….

 

பால் விலை ஏறினாலும் லாபம் மட்டும் குறையவில்லை……சக்கை போடு போடும் பிஸ்கட் நிறுவனம்….

பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.498 கோடியை மொத்த லாபமாக ஈட்டியுள்ளது.

உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) மொத்த லாபமாக ரூ.498 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டில் இதே காலாண்டில் அந்நிறுவனம் ஈட்டியதை காட்டிலும் 8.5 சதவீதம் அதிகமாகும்.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

2019 செப்டம்பர் காலாண்டில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3,049  கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். 

பிரிட்டானியா தயாரிப்புகள்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் நிதிநிலை முடிவுகள் குறித்து கூறுகையில், பேக்கரி வர்த்தகத்துக்கான முக்கிய மூலப்பொருட்களின் விலையில் மிதமான பணவீக்கம் காணப்பட்டது. அதேநேரத்தில் பால் விலை உயர்ந்தது எங்களது பால் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் செலவு செயல்திறன் மற்றும் நிலையான செலவுகளை அதிகபட்ச நன்மை கிடைக்கும் வகையில் அவற்றை நாங்கள் துரிதப்படுத்தினோம். அது எங்களது வர்த்தகத்தின் வடிவத்தை மேம்படுத்தவும், காலாண்டில் மிக உயர்ந்த செயல் லாபத்தை பெறவும் உதவியது என தெரிவித்தார்.