பால் விலையை தொடர்ந்து நெய், தயிர் உட்பட அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்தது!

 

பால் விலையை தொடர்ந்து நெய், தயிர் உட்பட அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்தது!

aavin product

யார் என்ன போராட்டங்கள் செய்தாலும், பால் விலையேற்றத்தில் மாறுதல் கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்து பால் விலையை ஏற்றினார் முதல்வர் எடப்பாடி. இந்நிலையில், ஆவன் பால் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து பால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகளும் ஏறியுள்ளது.  அதன்படி, பால் பவுடர் ஒரு கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.320 ஆகவும், பால்கோவா கிலோ ஒன்றிற்கு ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.520 ஆகவும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் நெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.460 லிருந்து ரூ.495 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

aavin

இவை தவிர, ஆவின் நிறுவனத்தின் பன்னீர் ஒரு கிலோ ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரைலிட்டர் தயிர் ரூ.2 உயர்ந்து ரூ.27 ஆகவும், வெண்ணெய் அரை கிலோ ரூ.10 ஆக உயர்த்தப்பட்டு ரூ.240 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால்கோவா உள்ளிட்ட பால் உப பொருட்களின் விலை உயர்வு 18-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.