பால் விற்பனை நேரம் மாற்றம்…வேலூர் ஆட்சியர் அறிவிப்பு!

பால் விற்பனை நேரம் மாற்றம்…வேலூர் ஆட்சியர் அறிவிப்பு!

இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.  

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்துவைக்கப்பட்டுள்ளது.

tt

இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.  

tt

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பால் விற்பனை நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தினமும் காலை 06.00 மணிமுதல் 8.00 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் 07.00 மணிவரையும் விற்கப்பட்டு வந்த நிலையில் வேலூர் ஆவின் நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று,  நாளை முதல் தினமும் காலை 06.00 மணி முதல் 10.00 மணிவரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.