“பால் வாங்க கூட காசு இல்ல”.. ஊரடங்கால் தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்!

 

“பால் வாங்க கூட காசு இல்ல”.. ஊரடங்கால் தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்!

பால் வாங்க கூட காசு இல்லாமல் தவிப்பதாக புதுக்கோட்டையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வருமானமில்லாமல் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பால் வாங்க கூட காசு இல்லாமல் தவிப்பதாக புதுக்கோட்டையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ttn

புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட காந்திநகரில் கிட்டத்தட்ட 79 குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தனர். தினமும் கிடைக்கும் ரூ.100,200 வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த அவர்கள் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பற்றி பேசிய தொழிலாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலை நம்பியே இருக்கும் எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. எவ்வளவோ வறுமையை பார்த்துள்ளோம். ஆனால் இந்த ஊரடங்கு மிக கொடுமையாக உள்ளது. குழந்தைக்கு பால் வாங்க கூட முடியவில்லை. எங்களின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.