பால், முட்டையெல்லாம் சாப்பிட கூடாது…ஒன்றரை வயது குழந்தைக்கு டயட்; பரிதாபமாக பலியான சோகம்!

 

பால், முட்டையெல்லாம் சாப்பிட கூடாது…ஒன்றரை வயது குழந்தைக்கு டயட்; பரிதாபமாக பலியான சோகம்!

ஷீலா – ரயான் தம்பதி தங்களுடைய 18 மாத குழந்தைக்கும் இதே உணவு முறையை  கொடுத்து வந்துள்ளனர். 

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் உணவு  பழக்கத்தை மாற்றி வருகின்றனர்.  குறிப்பாக டயட் என்ற சொல் பலரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இருப்பினும் டயட் யார் இருக்க வேண்டும்?  அளவிற்கு அதிகமாக செல்லும் போது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பது இந்த செய்தியிலிருந்து தெரியவருகிறது.

baby

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி ஷீலா – ரயான் தம்பதி. இவர்கள் வீகன் உணவு முறையைப் பின்பற்றி  வந்துள்ளனர்.   வழக்கமான சைவ உணவுப் பழக்கத்தோடு சேர்த்து, பால் மற்றும் `டயரி’ பொருள்கள் என்று அழைக்கப்படும் பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்க்கும் உணவுமுறையே இந்த வீகன் உணவுமுறை.  அதன்படியே ஷீலா – ரயான் தம்பதி தங்களுடைய 18 மாத குழந்தைக்கும் இதே உணவு முறையை  கொடுத்து வந்துள்ளனர். 

bb

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அந்தக் குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது. பின்னர் குழந்தையின் உடலை  பரிசோதித்த போது, குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால்  உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதிக்கு 5 மற்றும் 3 வயது முறையே  இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களும் மெலிந்த உருவத்துடன் ஊட்டச்சத்து குறைபாட்டோடு  இருப்பதால் அவர்கள் உடனடியாக அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.