பால் தாக்கரே குடும்பத்தின் முதல் எம்.எல்.ஏ.! வருங்கால முதலமைச்சர்! ஆதித்யா தாக்கரே

 

பால் தாக்கரே குடும்பத்தின் முதல் எம்.எல்.ஏ.! வருங்கால முதலமைச்சர்! ஆதித்யா தாக்கரே

சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரே குடும்பத்தில் முதலாவதாக அவரது பேரன் ஆதித்யா தாக்கரே சட்டப்பேரவை உறுப்பினராக (எம்.எல்.ஏ.) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மறைந்த பிரபல தலைவர் பால் தாக்கரே 1966ல் சிவ சேனா கட்சியை தொடங்கினார். ஆனால் அவரோ அல்லது அவரது மகன் உத்தவ் தாக்கரேவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ எந்தவித தேர்தல்களிலும் போட்டியிட்டது கிடையாது. தேர்தல்களில் தொண்டர்களை போட்டியிட வைத்து விட்டு கட்சி பொறுப்பை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தாக்கரே குடும்பத்தினர் வைத்து இருந்தனர்.

பால் தாக்கரே

இந்த சூழ்நிலையில் மாற்றம் ஒன்றே மாறாது என்பதை உறுதி செய்வது போல் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யா தாக்கரேவை முதல் அமைச்சராக்கும் ஆசை வந்து விட்டது. இதனையடுத்து தற்போது நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வோர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரேவை களம் இறக்கினார். கட்சி தொண்டர்களும், மக்களும் பால் தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரேவை வெற்றி பெற செய்தனர். இதனையடுத்து பால்தாக்கரே குடும்பத்தின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் பெருமையை ஆதித்யா தாக்கரே பெற்றார்.

உத்தவ் தாக்கரே

வோர்லி தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் மிகவும் அன்போடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உண்மையை உள்வாங்கி கொள்கிறேன். மக்களின் குறைகளை கேட்பது, சச்சின் அஹிர்-ஜி மற்றும் ஷிண்டே-ஜி ஆகியோர் மேற்கொண்ட பணிகளை முன்னெடுத்து செல்வது ஆகியவற்றுக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன் என தெரிவித்தார்.