பால் கொழுக்கட்டை

 

பால் கொழுக்கட்டை

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டையை சுவையாகவும், எளிதாகவும் செய்யலாம். பள்ளி விட்டு வரும் வாண்டுகளுக்கு சத்தான சுவையான எளிதில் செரிக்கும் மாலை நேர டிபன்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டையை சுவையாகவும், எளிதாகவும் செய்யலாம். பள்ளி விட்டு வரும் வாண்டுகளுக்கு சத்தான சுவையான எளிதில் செரிக்கும் மாலை நேர டிபன்.

milk pudding

தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு – 1/2கிலோ
வெல்லம் (அல்லது) கருப்பட்டி-1/2கிலோ
(சீவி வைத்துக் கொள்ள வேண்டும்)
தேங்காய் – 1மூடி(துருவி கொள்ளவேண்டும்)
சுக்கு – 1சிட்டிகை
காய்ச்சிய பசும் பால் – 1டம்ளர்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவைப் போல் பிசைந்து கொள்ளவேண்டும்.
கொஞ்சம் மாவை எடுத்து உருண்டை அல்லது தட்டையாகவோ விரும்பிய வடிவத்தில்  உருட்டிக் கொள்ளவேண்டும்.

milk pudding

தேவையான தண்ணீர் தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதிக்கவிடவும். பின்பு கொழுக்கட்டைகளை சிறிது சிறிதாக சேர்த்து  எல்லா கொழுக்கட்டைகளையும் வேகவைத்தவுடன் அதே தண்ணீரில் வெல்லம், ஒரு சிட்டிகை சுக்கு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதனுடன் பால், துருவிய தேங்காய் சேர்க்கவும். 
சுவையான சத்தான பால் கொழுக்கட்டை தயார்