பால் கெட்டுப்போனதாக முதல்வரிடம் புகார் செய்த எஸ்.வி.சேகர்! – மாற்றிக்கொடுத்த ஆவின் நிர்வாகம்

 

பால் கெட்டுப்போனதாக முதல்வரிடம் புகார் செய்த எஸ்.வி.சேகர்! – மாற்றிக்கொடுத்த ஆவின் நிர்வாகம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் புகார், கோரிக்கை பதிவுகள் வெளியிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு எஸ்.வி.சேகர் செய்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பால் கெட்டுப்போனதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் முன்னாள் எம்.எல்.ஏ-வும் நடிகருமான எஸ்.வி.சேகர் புகார் செய்ததைத் தொடர்ந்து பால் பாக்கெட் மாற்றிக் கொடுக்கப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் புகார், கோரிக்கை பதிவுகள் வெளியிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு எஸ்.வி.சேகர் செய்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தான் ஆவினில் வாங்கிய ஒன்பது பால் பாக்கெட் கெட்டுப்போய்விட்டது என்று எஸ்.வி.சேகர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

s-ve-sheker-78.jpg

இதைத் தொடர்ந்து ஆவின் அதிகாரிகள் புதிய பால் பாக்கெட்டை வழங்கிச் சென்றுள்ளனர். இது குறித்து எஸ்.வி.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பதிவிட்ட மூன்று மணி நேரத்தில் ஒன்பது புதிய டபுள் டோண்டு பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டுக்கு வந்து மாற்றிக்கொடுத்து சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

பால் பாக்கெட் கெட்டுப்போனதற்கு எல்லாம் முதலமைச்சரிடம் புகார் செய்வது கொரோனா பாதிப்பு காலத்தில் தேவையா என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஏழைகள் பலர் பால் பாக்கெட் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கும்போது இப்படி கெட்டுப்போன பால் பாக்கெட் மாற்ற அதிகாரிகளைப் பயன்படுத்துவது தேவையா என்றும் பதிவிட்டு வருகின்றனர்.