பால் உற்பத்தியாளர் நலன் கருதியே பால் விலை உயர்த்தப்பட்டது – முதலமைச்சர் பழனிசாமி

பால் உற்பத்தியாளர் நலன் கருதியே பால் விலை உயர்த்தப்பட்டது – முதலமைச்சர் பழனிசாமி

உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியாளர் நலன் கருதியே பால் விலை உயர்த்தப்பட்டது – முதலமைச்சர் பழனிசாமி

உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், பதப்படுத்தும் செலவு உள்ளிட்டவை உயர்ந்ததாலும் பால் விற்பனை விலை விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்படுகிறது. கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது.சட்டப்பேரவையில் அறிவித்தப்படிதான் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டது.” என்றார்