பால்கனி அரசுகளே தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுங்கள்– கமல்ஹாசன்

 

பால்கனி அரசுகளே தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுங்கள்– கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ஈட்டு விடுப்புத் தொகை ஓராண்டு நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்காக ஈட்டு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர்.ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்” என குறிப்பிட்டுள்ளார்.