பால்கனில இருக்கறவன குஷிபடுத்தறது இருக்கட்டும், கூரையே இல்லாதவன எப்ப பாக்க போறீங்க!! பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்!

 

பால்கனில இருக்கறவன குஷிபடுத்தறது இருக்கட்டும், கூரையே இல்லாதவன எப்ப பாக்க போறீங்க!! பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்!

பிரதமர் மோடி “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி.

பிரதமர் மோடி “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

letter

இந்நிலையில் பிரதமருக்கு மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில், “இந்தியாவில் முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தும்போது வெறும் 4மணி நேரம் மட்டுமே மக்களுக்கு அவகாசம் தரப்பட்டது. பணமதிப்பிழப்பு சமயத்தில் நடந்த தவறு இப்போதும் நடக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

பால்கனி மக்களை பற்றி மட்டுமே கவலைகொள்ளும் பால்கனி அரசு ஏழைகளை பற்றி நினைக்கவில்லை. அடுத்த வேளை உணவுக்கு எண்ணெய் இல்லாத ஏழைகள் எப்படி விளக்கேற்றுவார்கள்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.